பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் முன்னெடுக்கக்கூடிய பணிகள் தொடர்பான விபரம்!

Friday, 11 June 2021 - 18:02

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் முன்னெடுக்கக்கூடிய பணிகள் தொடர்பில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய, அத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில்  முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் மேற்படி பணிகளை சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னரை போலவே உணவு விநியோகத்துக்கான அனுமதி வழங்கப்படுவதுடன், விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்காக மாத்திரம் (வாரத்தில் இருநாட்கள்) திறக்க அனுமதி வழங்க்கப்படும்.