தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

Friday, 11 June 2021 - 21:06

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தமிழகத்தில் தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய முழுநேர ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மாத்திரம், அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த முழுநேர ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், இன்று உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்போது, மேலதிக தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி, தமிழகத்தில் மேலதிக தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.