காலதாமதமின்றி கொவிட் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகர் அத்தோனி பியூசி

Saturday, 12 June 2021 - 11:10

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF
கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்துவதற்கு இடைப்பட்ட காலத்தை நீடிப்பதால் மக்கள் தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகர் அத்தோனி ஃப்யூசி (Anthony Fauci) தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தும் கால எல்லை தொடர்பில் புதிய திருத்தங்களை வெளியிட்டிருந்தது.

இது குறித்து அவரிடம் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளுக்கு சிறந்த இடைவெளியை பேணமுடியும். குறிப்பாக பைஷர் தடுப்பூசிக்கு மூன்று வாரங்களும், மொடெர்னா தடுப்பூசிக்கு நான்கு வாரங்களும் இடைவெளி பேணப்படுகின்றன.

இதற்கிடையில் இந்தியாவை போன்று இங்கிலாந்தும் தடுப்பூசி செலுத்தும் கால எல்லையை நீடித்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியில் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.