இந்திய பிரதமரை சந்திக்க உள்ள தமிழக முதலமைச்சர்!

Saturday, 12 June 2021 - 21:25

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%21
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 17ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசாங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதலமைச்சர் சந்திக்கவுள்ளார்.

அரசாங்க ரீதியான சந்திப்புகள் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.