கொவிட் தொற்றால் 63 பேர் மரணம்!

Sunday, 13 June 2021 - 6:37

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+63+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் மேலும் 63 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

மே மாதம் 23 தொடக்கம் 31 ஆம் திகதி வரை 12 கொவிட் மரணங்களும், ஜூன் 01 தொடக்கம் 11 ஆம் திகதி வரை 51 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய 30 பெண்களதும் 33 ஆண்களதும் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.

லுணுவத்த, பண்டாரவளை, காலி, திஸ்ஸாவௌ, வென்னப்புவ, அழுத்மல்கடுவாவ, நாரம்மல, வாரியபொல, குடாகல்கமுவ, போயகனே, ரிதீகம, மடஹபொல, மொரட்டுவை, தன்னாமுன்ன, புலத்சிங்கள, வெள்ளவத்தை, பிலியந்தலை, கோட்டே, மக்குல்தெனிய, மாவனெல்லை, நாவலப்பிட்டி, பாணந்துறை, அரநாயக்க மற்றும் வாழைச்சேனை-05 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாழைச்சேனை-04, வலல்லாவிட்ட, பூண்டுலோயா, ஹன்தெஸ்ஸ, ஹதரலியத்த, கண்டி, கனேகொட, கம்பளை, பண்டாரகம, தன்னோவிட்ட, பிலிமத்தலாவை, தொம்பே, தொடங்கொட, மத்துகம, ஹாவாஎலிய, இப்பாகமுவ, கல்முனை, தொரவக்க, அக்குரணை மற்றும் வரக்காமுனை பகுதியைச் சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஒருவரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 02 பேரும், 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 08 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 15 பேரும், 70 - 79 வயதுக்கு உட்பட்ட 23 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 11 பேரும், 90 முதல் 99 வயதுக்கு உட்பட்ட 03 பேரும் கொவிட் நோயால் உயிரிழந்தனர்.

அவர்களில் 07 பேர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த மரணங்கள், கொவிட் தொற்றுடன் கொவிட் நியூமோனியா, உடலில் பல உறுப்புகள் செயலிழந்தமை, கொவிட் நுரையீரல் நியூமோனியா, மாரடைப்பு, இதயநோய் நிலைமை, மூளைக்காய்ச்சல் அழற்சி, மோசமான சுவாசக்கோளாறு, பக்கவாதம், குருதி நஞ்சானமை, நீரிழிவு, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உயர் குருதியழுத்தம், கடுமையான கரோனரி நோய், தீவிர கொவிட் நியூமோனியா, மூச்சிழுப்பு, பெருமூளைக்குழாய்களுக்கு சேதம், கொவிட்-19 மார்புத் தொற்று மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமை என்பவற்றினால் சம்பவித்துள்ளன.