அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான எச்சரிக்கை!

Sunday, 13 June 2021 - 9:05

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
நடமாட்ட தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற நடமாடும் வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது தொடர்பில் ஆராய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகின்றது

அந்த அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

அவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்