பிரபல நகைச்சுவை நடிகருடன் பணியாற்ற விரும்பும் கௌதம் மேனன்!

Sunday, 13 June 2021 - 10:06

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%21
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘மண்டேலா’.

கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம், பின்பு ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

அந்த வகையில், மண்டேலா படத்தை பார்த்த இயக்குநர் கௌதம் மேனன், அந்தப் படத்தை ஒரு சிறந்த காமெடி படம் என்று பாராட்டியதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி உள்ளார்.

இதற்கு நடிகர் யோகிபாபு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ள யோகிபாபு, இதுவரை கௌதம் மேனனுடன் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை.

தற்போது கௌதம் மேனனே, அவருடன் பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளதால், இந்த கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.