1,000 வருடங்கள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு! (படங்கள்)

Sunday, 13 June 2021 - 11:55

+1%2C000+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின்போது, ஒரு கழிவுநீர் தொட்டியிலிருந்து கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டை சுமார் 1,000 வருடங்கள் பழமையானது என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1,000 வருடங்களைக் கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது வியக்கத்தக்கதொரு விடயமாகும்.

எனவே, இதனை மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என அகழ்வாராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

இந்த முட்டையை கண்டெடுத்த அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒருவர் இதுபற்றி தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் டோவிட், சிசோரியா மற்றும் அப்போலினயா போன்ற நகரங்களிலும் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முட்டைகளின் உடையக்கூடிய தன்மை காரணமாக, உலகளாவிய ரீதியில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு கோழி முட்டையும் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.‌ எனவே இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு” என தெரிவித்துள்ளார்.