உலக வங்கியினால் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர் நிதியுதவி!

Sunday, 13 June 2021 - 15:11

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+40+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%21
இலங்கையில் நீர் வழங்கல், சுகாதார சேவை மற்றும் தொற்று நீக்கல் செயற்பாடுகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு அனுமதியளித்துள்ளது.

இந்த திட்டம் 7 மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள மக்கள் இதனூடாக நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிதியுதவியானது 'அனைவருக்கும் நீர்' என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவியளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவல் நிலையில் ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பான நீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைப்புக்களை உருவாக்குவது முக்கியமானதென இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.