சிரியாவில் இடம்பெற்ற இருவேறு பீரங்கி தாக்குதல்களில் 13 பேர் பலி - 27 பேர் படுகாயம்

Sunday, 13 June 2021 - 16:34

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+27+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வடக்கு சிரியாவின் அஃப்ரின் நகரின் மீது நேற்று(12) நடத்தப்பட்ட இருவேறு பீரங்கி தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நகரிலுள்ள ஒரு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதியியொன்றிலேயே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரியாவின் குர்திஷ் எனப்படும் போராளிகள் குழுவால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.