தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,198 பேர் கைது

Monday, 14 June 2021 - 6:20

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+1%2C198+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறைப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 32,593 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றைய தினம் 1,757 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் அத்தியாவசியமற்ற வகையில் பயணித்த 100 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினமும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதுடன் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.