இஸ்ரேலின் புதிய பிரதமராக நாஃப்தாலி பென்னட் பதவியேற்பு

Monday, 14 June 2021 - 7:14

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இஸ்ரேலின் புதிய பிரதமராக வலதுசாரி தேசியபட்டியல் உறுப்பினர் நாஃப்தாலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார்.

அந்த நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு அதில் எதிர்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வாக்குகளுக்குகளும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக 59 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 வருட ஆட்சி காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சில முக்கிய எதிர்கட்சிகள் இணைந்து அங்கு தேசிய அரசாங்கம் ஒன்றைய உருவாக்கியுள்ளன.

இதற்கமைய இஸ்ரேலின் பிரதமர் பதவி சுழற்சி முறையில் அமையவுள்ளது.

எதிர்கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு அமைய எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையில் நாஃப்தாலி பென்னட் (Naftali Bennett) இஸ்ரேலின் பிரதமராக பதவி வகிக்கவுள்ளார்.

 இதனையடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மற்றுமொரு எதிர்கட்சியின் தலைவரான யெய்ர் லெப்பிட் (Yair Lapid) பிரதமராக பதவி வகிக்கவுள்ளார்.