பிரித்தானியாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் வர்த்தக உடன்பாடு

Tuesday, 15 June 2021 - 21:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பிரித்தானியாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுக்கும், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கும் இடையிலான சந்திப்பில், இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் மேற்கொள்ளப்படும், முதலாவது வர்த்தக உடன்பாடு இது என்றும் தெரிவிக்கப்படுகிறது.