இஸ்ரேல் - பலஸ்தீன் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு இடையில் வான்வழித் தாக்குதல்!

Wednesday, 16 June 2021 - 9:49

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவிலிருந்து  தீப்பிழம்புகளுடனான பலூன்கள், இஸ்ரேலுக்கு நேற்று (15) அனுப்பப்பட்டதை அடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனின் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கும் இடையில், 11 நாட்களாக இடம்பெற்ற மோதல், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி, போர் நிறுத்தத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலினால் நேற்று (15) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலினால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் தகவல்கள் தெரியவரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.