வூஹானில் முகக்கவசம் – சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற 11,000 மாணவர்கள்

Wednesday, 16 June 2021 - 17:17

%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+11%2C000+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சீனாவின் வூஹான் நகரில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் மாபெரும் பட்டமளிப்பு விழாவொன் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹானிலேயே உலகில் முதலாவதாக கொவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது உலகமே கொரோனா தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நாடளாவிய முடக்கங்களை அமுல்படுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சீனாவின் வூஹான் நகரில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய சீனாவின் நோர்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள  விளையாட்டு மைதானத்தில் கடந்த 13 ஆம்திகதி இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட விருந்தினர்கள், மாணவர்களின் பெற்றோர் சமூக இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் அமர்ந்திருந்த அதேவேளை, ஒரு சிலர் மாத்திரம் முகக்கவசம் அணிந்திருந்தாக சீனா ஊடகமான ஹூபே நியூஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் வூஹான் பல்கலைக்கழகம் கொவிட் பரவல் காரணமாக இணைவழியாக பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

எனினும், குறித்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாதுபோன, 2,200க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கொவிட்  தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விதத்துக்கு இந்த பட்டமளிப்பு விழா சான்று பகர்வதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சீனாவில் பாரிய கொவிட் பரவல் ஏற்பட்டதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் விதிகள் கடைபிடிக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக தற்போது கொவிட் பரவல் பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் சீனாவில் புதிதாக 20 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்கள் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் இதுவரை 4,636 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை வூஹான் பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளன.