மியன்மாருக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் - ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை

Saturday, 19 June 2021 - 13:45

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மியன்மாருக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மியன்மாரில் ஆங் சாங் சூக்கி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமைதியான முறையில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்துள்ளன. பெலருஸ் மாத்திரம் எதிராக வாக்களித்தது.

மியன்மாருக்கு ஆயுதங்களை வழங்கும் சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.