பிரேஸிலில் 500,868 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

Sunday, 20 June 2021 - 9:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+500%2C868+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500,000 கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரேஸிலில் 2,247 பேர் கொவிட்  தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பிரேஸிலில் மரணித்தோரின் எண்ணிக்கை, 500,868 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி சர்வதேச ரீதியில் 5 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவான இரண்டாவது நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் 617,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.