கனியவள கூட்டுத்தாபனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன் பெற தீர்மானம்

Sunday, 20 June 2021 - 13:15

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கனியவள கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வாக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தக் கடன் தொகையை கனியவள கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ள, உள்நாட்டுக் கடனை செலுத்துவதற்கு பயன்படுத்த எதிர்பார்ப்பதாக கனியவள அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனம் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து 2.081 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளது.

அந்தக் கடனை மீள செலுத்துவதற்கு, வருடாந்தம் சுமார் 30 பில்லியன் ரூபா அவசியமாக உள்ளது.

இதற்கமைய பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு, கடன் வழங்கும் நான்கு நிறுவனங்கள் தற்போது இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.