24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலில்!

Sunday, 20 June 2021 - 16:34

24+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
12 மாவட்டங்களை சேர்ந்த பல பகுதிகள் நாளை அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேகவர் பிரிவும், மீகஹாவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சியபலபேவத்த கிராம சேவகர் பிரிவும், கிரிபத்கொடை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாஹேன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட புதிய வலத்தப்பிட்டி கிராமம் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 02 கிராம சேவகர் பிரிவும், வாழைச்சேனை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பாதுரிய கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு, இரத்தினபுரி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கெலந்தகல கிராம சேவகர் பிரிவின் முல்லேகந்த தோட்டமும், கொட்டல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாட்டத்தின் களுத்துறை வடக்கு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும், களுத்துறை தெற்கு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மினேரித்தென்ன சுனாமி கிராமும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட சாவட்கட்டு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் மாதம்பே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மரக்கலகம கிராம சேவகர் பிரிவும் நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்ஹேன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கரோலினா - கடவல தோட்டம் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் தெமட்டக்கொடை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஆராமய பிரதேசத்தின் 66வது தோட்டமும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் மஹாவெல காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நிககொல்ல மற்றும் நிககொல்ல வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், லக்கல காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கிவுலவாட்டிய, குருவெல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

காலி மாவட்டத்தின் இந்துரவ காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கொனகல கிராமசேவகர் பிரிவின் பொல் துடுவ கிராமமும், மாத்தறை மாவட்டத்தின் வெலிகம காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பெலன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 12 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 82 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 4மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.


நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பான விபரம்