நாளை மதுபானசாலைகளை திறக்க அனுமதி!

Sunday, 20 June 2021 - 18:50

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
நாடு முழுவதும் நாளை அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டவுள்ள நிலையில் அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.