வத்தளை - ஹேகித்த இரும்பு தொழிற்சாலையில் 128 பேருக்கு கொவிட்

Sunday, 20 June 2021 - 21:09

%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88+-+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+128+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
அதிகளவான இந்திய பிரஜைகள் பணியாற்றும் வத்தளை - ஹேகித்த பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்றுறுதியானவர்கள் உள்ளதாக சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவற்றின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக ராகம மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் அவர்களில் இந்தியாவின் டெல்டா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் உள்ளனரா என்பதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.