இவ்வாண்டு 30.7 சதவீதத்தினால் அதிகரித்த தேயிலை உற்பத்தி!

Monday, 21 June 2021 - 8:23

%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+30.7+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. அத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ள சில உயர்ரக தேயிலை உற்பத்திகளும் அதிகரிப்பை காட்டியுள்ளன.

எனினும் உர நெருக்கடியால் எதிர்கால உற்பத்தி குறித்து தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 30.7 சதவீதத்தினால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

மிகச்சிறந்த வானிலை காரணமாக இந்த அதிகரிப்பு பதிவானதாக தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.