உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Tuesday, 22 June 2021 - 6:21

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம சேவகர் பிரிவும், கொலன்னாவையில் உள்ள சிறிஆனந்தராம வீதியும் தனிமைப்படுத்தப்பட்டன.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொடக்கவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட கொட்டவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் மஹாபாகே காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெரனகபொக்குன ஜோர்ஜ் வீதி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.