இந்தியாவில் ஒரேநாளில் 80 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!

Tuesday, 22 June 2021 - 9:37

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%21
இந்தியாவில் நேற்று (21) ஒரேநாளில் 80 இலட்சம் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

21 ஆம் திகதியுடன் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று புதிய கொவிட் தடுப்பூசி கொள்கையை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று (21) முதல்நாளிலேயே 80 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

புதிய தடுப்பூசி கொள்கையின் படி, 75 சதவீதமான தடுப்பூசிகளை அதன் உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசாங்கம் கொள்வனவு செய்து, மாநில அரசுகளுக்கு வழங்கும்.

இந்தியாவே அதிகூடிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்ற நாடாக இருந்தபோதிலும், இதுவரையில் தடுப்பூசி செலுத்தக்கூடியவர்களில் 5 சதவீதமான மக்களுக்கு மாத்திரமே தடுப்பூசி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.