நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வின் பின்னரான வாகன விபத்துக்களில் 11 பேர் பலி! (காணொளி)

Tuesday, 22 June 2021 - 12:36

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதில் 8 பேர் நேற்று (21) இடம்பெற்ற விபத்துகளால் உயிரிழந்தவர்கள் எனவும், ஏனைய 3 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் பாதசாரிகள் 2 பேரும், உந்துருளிகளில் பயணித்த 6 பேரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த 2 பேரும், பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பாதசாரிகள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்களே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.