துருப்பை மீளழைக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா துரிதப்படுத்தாது!

Tuesday, 22 June 2021 - 14:49

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%21
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீளழைக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா துரிதப்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது. பென்டகன் பேச்சாளர் ஜோன் கேர்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபானியர்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படுவர் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அங்கு நிலவும் நிலைமைகளுக்கு அமைய இந்த கால அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபானியர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

எனவே அங்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.