இன்று இதுவரை 2,071 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Tuesday, 22 June 2021 - 20:46

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+2%2C071+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் மேலும் 751 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று இதுவரை 2,071 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் இதுவரை மொத்தமாக 243,891 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2009 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 209,296 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாட்டில் நேற்று மாத்திரம் 71 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளதாக ​அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.