டெல்டா ப்ளஸானது , கொவிட் தொற்றுக்கான சிகிச்சைகளை பலவீனப்படுத்தக்கூடியது

Wednesday, 23 June 2021 - 20:50

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%2C+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா ப்ளஸ் என்ற வைரசின் தன்மை குறித்து இப்போதைக்கு எதனையும் உறுதியாகக் கூற முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சுமார் 40 பேர் இந்த வகை வைரஸ் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெல்டா ப்ளஸ் அல்லது ஏ.வை.01 (யுலு.1) என்று அழைக்கப்படுகின்ற இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவுவதுடன், கொவிட் பரவலுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகளையும் பலவீனப்படுத்தக்கூடியது என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலதிக பரிசீலனைகள் இடம்பெற்று வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.