அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

Thursday, 24 June 2021 - 10:50

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
கடந்த 2020 ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட பயிற்சி நிலை ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுக்கு 84 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 42 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரச அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த தமிழ் மொழி மூல பரீட்சைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மொழி பயிற்சி பாடநெறிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.