வெலிமடையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 பேருக்கு நேற்று கொவிட்

Thursday, 24 June 2021 - 17:28

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+40++%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரகஸ், ஹுலங்காபொல பகுதியில் நேற்று 40 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 30 பேருக்கும், எழுமாறாக எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரே வேளையில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொரகஸ் மற்றும் ரேந்தபொல ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.