வெளிநாட்டு துருப்புகளுக்கு தாலிபான் விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, 05 July 2021 - 21:57

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறும் போது, அனைத்து வெளிநாட்டுப் படையினரும் வெளியேறிவிட வேண்டும் என்று ஆப்கான் - தாலிபான் பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

அதன் பேச்சாளர் சுஹைல் சஹீன் கட்டாரில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்திலிருந்து பீ.பி.சிக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினர் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியுடன் வெளியேறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் காபூல் விமான நிலையம் மற்றும் அமெரிக்க ராஜதந்திர நிலைய பாதுகாப்புக்காக 1000 துருப்பினர் வரையில் நிறுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அல்கைதா உள்ளிட்ட தீவிரவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்க அனுமதிக்கப்படாது என்ற தலிபானிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த படைவெளியேற்றம் இடம்பெறுகிறது.

எவ்வாறாயினும் நேட்டோ படையினர் வெளியேறியதன் பின்னர், வெளிநாட்டுப் படையினர் யாரும் அங்கு நிலைகொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று தாலிபான் அறிவித்துள்ளது.