இங்கிலாந்தில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை!

Tuesday, 06 July 2021 - 8:51

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது சட்டரீதியாகக் கட்டாயமில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

அந்தநாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை நேற்று (05) அறிவித்தார்.

இதன்படி கடந்த 16 மாதங்களாக இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

வீட்டிலிருந்து பணியாற்றுகின்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சமுக இடைவெளி கட்டுப்பாடும் தளர்த்தப்படவுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

எனினும் இதுகுறித்த இறுதி மீளாய்வு இந்த மாதம் 12 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.