ரொஜர் ஃபெடரர் - ஜொஹானா கொன்டா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகினர்!

Wednesday, 14 July 2021 - 9:59

%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21
20 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரொஜர் ஃபெடரரும் (Roger Federer) பிரித்தானியாவின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை ஜொஹானா கொன்டாவும் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.

39 வயதான ஃபெடரர் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அவர் ஏற்கனவே 2008 ஒலிம்பிக் போட்டிகளில் இரட்டையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், 2012ல் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

அதேநேரம் கொன்டா, விம்பிள்டன் தொடரிலிருந்து வெளியேறியதன் பின்னர், அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.