ஒருநாள் - இருபது 20 அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Wednesday, 14 July 2021 - 21:22

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+20+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%21+
ஒருநாள் மற்றும் இருபது 20 அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் தரவரிசை பட்டியலில், நியூஸிலாந்து அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா அணி 118 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணி முறையே 4 முதல் 8ஆம் இடங்கள் வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாள் சர்வதேச தொடருக்கான இந்தத் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணி 77 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, இருபதுக்கு 20 தரப்படுத்தல் பட்டியலில், 278 புள்ளிகளுடன், இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா அணி 272 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து அணி 263 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அணி 225 புள்ளிகளுடன், 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தரவரிசை (ODI Ranking)No description available.இருபது 20 கிரிக்கெட் தரப்படுத்தல் (T20 Ranking)

No description available.