வியட்நாம் தூதுவர் - இராஜாங்க அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்!

Thursday, 15 July 2021 - 9:08

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21
இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையில், இயற்கை விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் (Ho Thi Thanh Truc ), பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தபோது இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வியட்நாமில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாட்டை இராஜாங்க அமைச்சர் பாலசூரிய இதன்போது விளக்கியுள்ளார்.

இதற்கமைய, சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வியட்நாம் தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.