கொவிட் தொற்று உறுதியான ரிஷப் பன்ட் தனிமைப்படுத்தப்பட்டார்!

Thursday, 15 July 2021 - 10:24

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற, உலக டெஸ்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, இங்கிலாந்து சென்ற 23 பேர்கொண்ட இந்திய அணிக்குழாம், இங்கிலாந்துடனான தொடரிலும் பங்கேற்பதற்காக அங்கு தங்கியுள்ளனர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணிக்குழாமினருக்கு அண்மையில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் சஹா, இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்று அதிகரிக்கின்றமை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய வீரர் ரிஷப் பன்ட் கொவிட்-19 தொற்று உறுதியானதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் வியாழக்கிழமை டர்ஹாமிற்கு  அணிக்குழாமினருடன் பயணிக்க மாட்டார் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.