ஆடைத்தொழிற்துறையின் பிரதிநிதிகள் - நிதியமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்

Friday, 16 July 2021 - 8:34

+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
துணி மற்றும் ஆடைத்தொழிற்துறையின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது நேற்று (15) அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.

ஆடைத்தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் ஆடைத்தொழிற்துறையின் இலக்குகளை அடைவதற்கும், தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.