சந்திமாலின் கோரிக்கைகமைய நாளொன்றை ஒதுக்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

Friday, 16 July 2021 - 12:06

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%21
தனது கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தர்ப்பமொன்றை கோரி, இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஸ் சந்திமாலினால் முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதிலளித்துள்ளது.

சந்திமால் முன்வைத்த கடிதம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் கலந்துரையாடியதாகவும், அது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வருமாறு தினேஸ் சந்திமாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பிய தினேஸ் சந்திமால், தமது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதில் தனது கிரிக்கெட் பெறுதிகளை குறிப்பிட்டிருந்த 31 வயதான சந்திமால்,  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களின் தரவுகளின் அடிப்படையில், அவர்கள் தமது இரண்டாவது பாகத்திலேயே அதிகளவில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.