அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருவாய் 14% ஆல் அதிகாிப்பு!

Friday, 16 July 2021 - 21:28

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+14%25+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருவாயானது வருடத்தின் அரையாண்டு காலப்பகுதியில் 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம் 650 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்றுமதி 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில், ஜூன் மாதத்தில் மாத்திரம் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அதிகூடிய அலகாக பதிவாகியுள்ளது.