பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, 17 July 2021 - 7:43

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+31+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் 3 விக்கட்டுக்களை வீழ்த்திய சஹின் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi) போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.