கொவிட் தடுப்பூசி பணிகள் நிறைவுற்ற பின் சுற்றுலாத்துறை முன்னேறும் - சுற்றுலாத்துறை அமைச்சர்

Saturday, 17 July 2021 - 9:31

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் சுற்றுலாத்துறை முழுமையாக முன்னேறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக விமான சேவை நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கியுள்ளன.

அவ்வாறு இலங்கை வருவோருக்கு சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், நாட்டின் சனத்தொகையில் 60வீதமானோருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.