கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அதிகரிப்பு

Saturday, 17 July 2021 - 13:29

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களிலிருந்து உற்பத்தி நடவடிக்கைள் இவ்வாறு சிறிதளவு முன்னேற்றமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 51.3 என்ற சுட்டெண் பெறுமதியினைக் கடந்த மாதத்தில் பதிவுசெய்து வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.