டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொவிட்!

Saturday, 17 July 2021 - 17:18

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%21
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொவிட் தொற்றுறுதியானவர் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் குழு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து குறித்த தொற்றாளர் அப்புறப்படுத்தப்பட்டு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தொற்று உறுதியான நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் ஜப்பான் - டோக்கியோவில் எதிர்வரும் 23ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.