இந்திய அணிக்கு எதிராக எமது வீரர்கள் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவர் - தசுன் ஷானக்க

Saturday, 17 July 2021 - 21:37

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95
இந்திய அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவார்கள் என அந்த அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த இந்த தொடரே உரிய களமாகும்.

இலங்கை அணியின் வீரர்கள் இந்திய அணியை எதிர்கொள்ள சிறந்த மன தைரியத்துடன் இருக்கின்றார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அணியின் வீரர்கள் செயற்படுவார்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை - இந்திய அணிக்களுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளைய தினம் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.