கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் விடுவிப்பு!

Saturday, 17 July 2021 - 22:05

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் நஜிபுல்லா அலிகெய்லின் (Najibullah Alikhil) மகள் இஸ்லாமாபாத்தில் நேற்று(16) கடத்தப்பட்டார்.

இஸ்லாமாபாத்தில் ராணா பகுதியில் வைத்து, 26 வயதான குறித்த யுவதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர்  இன்று விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்தன.

கடுமையாக சித்திரவதைக்கு ஆளான தூதுவரின் மகள்  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆப்கானிஸ்தான்  வெளிவிவகார  அமைச்சு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தமது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆப்கான் தூதுவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக  ஊழியர்களின் பாதுகாப்பு  கவலைக்குரிய நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் தூதரகம் உள்ளிட்ட ஏனைய தூதரகங்களின் பாதுகாப்பையும்,  உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

மேலும், மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சந்தேகநபர்களை உடன் கண்டறிந்து கைதுசெய்யுமாறும் கோரியுள்ளது.