பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கொவிட் தொற்று!

Sunday, 18 July 2021 - 8:34

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளர் சஜிட் ஜாவிட்டுக்கு (Sajid Javid) கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக சிறியளவிலான நோய் அறிகுறிகளே அவருக்கு தென்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

தொற்று உறுதியானதையடுத்து  அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நாளாந்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 54,674 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.