ஒபெக் அமைப்பின் விசேட கூட்டம் இன்று!

Sunday, 18 July 2021 - 8:39

%E0%AE%92%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அங்கம் வகிக்கும் ஒபெக் அமைப்பின் விசேட கூட்டம் ஒன்று இன்று(18) நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் சவுதி அரோபியா, குவைட், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் கனியவளத்துறை அமைச்சர்கள் நேற்று கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் எரிபொருள் உற்பத்தியை 4 இலட்சம் பீப்பாய்களாக அதிகரிக்க ஒபெக் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியம் இதுவரை அதற்கான இணக்கப்பாட்டை வெளியிடவில்லை.

இதன்காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 6 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.