இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

Sunday, 18 July 2021 - 8:55

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று(18) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை அணியின தலைவர் தசுன் சானக, இந்திய அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த இந்த தொடரே உரிய களமாகும்.

இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அணியின் வீரர்கள் செயற்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.