ஜேர்மன் - பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : 170 பேர் பலி!

Sunday, 18 July 2021 - 13:21

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%3A+170+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தை தாக்கிய பாரிய வெள்ளப்பெருக்கு தற்போது குறைவடைந்து வருவதாக அந்நாட்டு மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது 170 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஜேர்மன் பொன் நகரத்திற்கு தென் மேற்கே உள்ள அணைக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் உள்ளது.

இதுதவிர ஹெயின்ஸ்பேக் (Heinsberg) மாவட்டத்தில் உள்ள பிறிதொரு அணைகட்டு நேற்று முன்தினம் உடைப்பெடுத்துள்ள நிலையில் அந்த பிரதேச வாழ் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ந்தும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.