இவ்வாண்டு முதலாவது காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவீதமாக பதிவு

Sunday, 18 July 2021 - 13:27

%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+4.3+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
2021 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளதாக நாணய சபையின் உறுப்பினர் ராணி ஜயமஹா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக வங்கி துறையினருடனான சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டார்.

கடன்களை மீள செலுத்துவதில் இலங்கை காத்திரமான முறையில் செயல்படுவதாக கடன் வழங்கும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை பேராசிரியர் டபிள்யு.டி. லக்ஷ்மனின் தலைமையிலான நாணயசபை தற்போது மறுசீரமைக்கப்பட்டு மேலும் சிறப்பாக செயல்படுவதாக நிதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், முதலாவது காலாண்டு பொருளாதார வளர்ச்சியினை கருத்திற் கொள்ளும்போது, இந்த வருட இறுதியில் 5 சத வீத வளர்ச்சியை எட்டுவது கடினமான விடயம் அல்லவென இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.